சென்னை ஜூலை 03
சென்னை அம்பத்தூர் பாலாஜி நகர் பி-வெல் மருத்துவமனை அருகில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலய அதிநூதன அஷ்டபந்தன மஹோன்னத மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அம்பத்தூர் (ஓ.டி) – ஆவடி சாலையில் ஆர்ய வைஸ்ய குலத் தோன்றல்களின் தவப்பயனாய் பரமதயாபரி ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரியின்
உட் பிரகார தெய்வங்களாகிய
திருவருள் கூட்டு வித்த வண்ணம் ஸ்ரீ சித்தி விநாயகர் பாலசுப்ரமண்யர் இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சத்தியாகிய மகேஸ்வரி வைஷ்ணவி பிரம்ஹி கோஷ்ட தேவதைகளும் நவக்கோள் நாயக நாயகியரும் சீரடி சாய்பாபா மற்றும் அனந்தன் வாசுகி நாகராஜாக்கள் பரிவார சகீதமாய் ஸ்ரீ ஸ்ரீ வாசவி
உள்ளிட்ட
சுவாமிகளின் நூதன ஆலயம் அழகுற அமைந்துள்ள திருக்கோயிலின் கும்பாபிஷேகம்
பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இரவு 7.00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி வழங்கினார்.
இவ்விழாவில் ஸ்ரீ ஸ்ரீ சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி சாரிட்டபிள் டிரஸ்ட்டின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.சங்கர ராவ், செயலாளர்கள் டி.என்.குமார் (செயல்பாடுகள்)பி.சேஷாத்ரி (நிர்வாகம்) துணைச் செயலாளர் இ.பாலாஜி மேனேஜிங் டிரஸ்ட்டி ஜி.பத்மநாபன் பொருளாளர் சி.ரெங்கநாதம் செட்டி துணைப் பொருளாளர் பி.ஸ்ரீதர் கௌரவத் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அம்பத்தூர் மகிளா
சங்கத்தின் தலைவி கே.ஷோபா சத்யா உட்பட மகிளா சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



