நாகர்கோவில் ஜூலை 2
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்த ஒருவர் தப்பியோடிய நிலையில், மீதமுள்ள 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் அவர்கள் பிரதீஷ், கிருபாகரன்,ரெஞ்சித் மற்றும் விஷ்ணு என்பதும் அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.