ஈரோடு தெற்கு மாவட்ட தி மு க இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் தலைமையில் இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. இதே போல ஈரோடு மாநகராட்சி 35 வது வார்டில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை இளைஞர் அணியில் சேர்த்து அதற்கான படிவத்தை நிர்வாகிகளிடம் வழங்கினார் .இதில் கோட்டை பகுதி தி மு க செயலாளர் பொ. ராமச்சந்திரன் கவுன்சிலர் புவனேஸ்வரி பாலசுந்தரம் மற்றும் முன்னாள் கவுன்சிலர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



