தஞ்சாவூர் ஜூன் 25
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் மருந்து கள் இருப்பு குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து மருந்தாளுநர்கள், செவிலியர் கண்காணிப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தர விட்டார்.
ஒரத்தநாடு பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
அப்போது ஒரத்தநாடு பேருந்து நிலைய கட்டண கழிப்பறைகள், பொது கழிப்பறைகள், அசுத்தமாக வும் ,ஆர்வி நகர் பூங்காவில் அசுத்தமாகவும், விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும் கிடைத்தது. இதை உடனடியாக சீர் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக் கொண்டு வர ஆட்சியர் அறிவுறுத் தினார். அதை செயல்படுத்தாதால் ஒரத்த நாடு பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமரகுருவை ஆட்சியர் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் ஒரத்தநாடு அரசு மருத்து வமனையில் ஆட்சியர் ஆய்வு மேற் கொண்ட போது மருந்துகளின் இருப்பில் குறை கண்டறியப்பட்ட தால், தொடர்புடைய மருந்தாளுந ர்கள் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார்.