மதுரை ஜூன் 22
மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேனிநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு யோகா பயிற்சி ஆசிரியர் பேராசிரியர் ராஜசேகரன். சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிறப்பு விருந்தினருக்கு பள்ளி முதல்வர் ஜோஸ்பின் ராணி துகில் அணித்து வரவேற்பு செய்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் விழா அரங்கில் பேசும் போது சர்வதேச யோகா தினம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் யோகாவின் முக்கியத்துவத்தையும் தேவையையும் உணர்ந்து இந்தியா முழுவதும் யோகா தினத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையில் எடுத்துரைத்தார். அதன் அடிப்படையில் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வலியுறுத்திள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஜூன் 21 முதல் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் யோகாவிற்கு உலகளவில் இந்தியா அடித்தளமாக விளங்குகிறது என்பது குறிப்பிடதக்கது. மேலும் நாம் யோகா பயிற்சி செய்வதன் மூலம் நமது உடல் ஆரோக்கியத்தை மேன்படுத்துகிறது. மன அழுத்தத்தையும் உடல் வலிகளையும் குறைக்கிறது இதய ஆரோக்கியத்தை அதிகப் படுத்துகிறது. எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துகிறது. மன அமைதியை மேன்படுத்துகிறது. உடலில் நோய் வராமல் தடுக்கிறது. ஆன்மீக உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இப்படி பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய யோகாவை நாம் அனைவரும் பின்பற்றுவோம் என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து பேராசிரியர் ராஜசேகரன் பேசுகையில் தினசரி யோகா செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்து யோகாசனத்தை துவக்கி வைத்தார் மாணவிகள் ஆர்வமுடன் யோகாசனம் செய்தனர்.
இந்த நிகழ்வின் போது பள்ளி ஆசிரியர் பெருமக்கள் சிறப்பாக பணியாற்றினர்