மதுரை ஜூன் 22,
மதுரையில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
மதுரை தெற்கு ரயில்வே கோட்டத்தின் சார்பாக சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் மதுரையில் ரயில்வே காலனி செம்மண் திடலில் சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமை வகித்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அவருடன் ரயில்வே கட்டமைப்பு திட்ட மேலாளர் ஹரிகுமார், கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் குடும்பத்தினர் ஆகியோர் சிறப்பு யோகா பயிற்சியில் பங்கேற்றனர். காந்திகிராமிய பல்கலைக்கழக யோகக் கலை தலைமை பயிற்சியாளர் முனைவர் டி. ரவிச்சந்திரன் மற்றும் மதுரை மகாத்மா காந்தி யோகா பயிற்சி மைய இயக்குனர் கே.பி. கங்காதரன் ஆகியோர் ரயில்வே அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சிறப்பு யோகா பயிற்சி அளித்தனர்.