விழுப்புரம், நவ.02.
தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரி, பள்ளி மாணவர்கள் ஒழுங்காக முடி வெட்டவில்லை என்றால் மொட்டை அடித்துவிடுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அயன்ரெட்டியாபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சில மாணவர்கள் ரவுடிகள் போன்று முடி வெட்டிக்கொள்வதாகவும், ஒழுங்கற்ற தோற்றத்தில் பள்ளிக்கு வருவதாகவும் தெரிவித்தார். சரியாக முடி வெட்டாத மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும், தேவைப்பட்டால் மொட்டை அடிக்கலாம் என்றும் கூறினார்.
மேலும், மாணவர்கள் கணுக்காலுக்கு மேல் பேன்ட் அணிவது குறித்தும் அவர் விமர்சித்தார். ஒருவரின் தோற்றத்தைப் பார்த்தே அவரைப் பற்றித் தவறான எண்ணம் உருவாகலாம் எனக் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.



