கிருஷ்ணகிரி, அக் : 10
கிருஷ்ணகிரி பழையபேட்டை ஸ்ரீ முருகன் மஹால் திருமண மண்டபத்தில், கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற 11-ஆம் ஆண்டு கம்பன் விழாவை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பா. முகுந்தன், கம்பன் கழக நிறுவனர் முனைவர் இ. ரவீந்தர், செயலாளர் அருள், பொருளாளர் மு. ஸ்ரீரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



