திண்டுக்கல், அக். 10:
திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.130.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பழனி–வத்தலகுண்டு சர்வீஸ் சாலையில் ரூ.74.89 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணி, சந்தை சாலையில் ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் புதிய மின்நூலகம் அமைக்கும் பணி, பொன்னிமாந்துறை புதுப்பட்டி சாலையில் மியாவாக்கி முறையில் அடர் குறுவனம் அமைத்து மரங்களைப் பராமரிக்கும் பணி மற்றும் ரூ.47.86 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த், மாநகர நல அலுவலர் முருகானந்த், மாநகராட்சி பொறியாளர் சனல் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



