தருமபுரி, ஆக. 25:
தருமபுரி குமாரசாமிப்பேட்டை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 120-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் பின்புறம் உள்ள தட்சணாமூர்த்தி மடத்தெருவில் நடைபெற்ற விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் ஆர். மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கே. ஸ்ரீதர் வரவேற்றார்.
பொருளாளர் மணிவண்ணன், ஊர் பிரமுகர்கள் குமார், வேலாயுதம், மோகன், சதாசிவம், சண்முகம், டி.ஜி. மணி, அன்பு, மணிவண்ணன், செல்வமணி, அறக்கட்டளை நிர்வாகிகள் கணேஷ், சரவணன் மற்றும் நகராட்சி கவுன்சிலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவையொட்டி திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருவுருவப் படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் சந்தோஷ் மற்றும் சிவா ஆகியோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் இம்பா அமைப்பின் மாநில செயலாளர் சரவணன், நிர்வாகிகள் உதயபானு, தவமணி, சேகர், பாபு, சோமசுந்தரம், பழனிசாமி, பூங்குன்றம், கண்ணன், பசுபதி உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



