By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் மாவட்டத்தில் நுகர்வோர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பத்தூர் மாவட்டத்தில் நுகர்வோர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
தமிழ்நாடுதிருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நுகர்வோர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Last updated: August 5, 2026 6:40 pm
August 5, 2026
10 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஆக. 5 –

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் நடைபெற்ற உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழாவில், உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தினை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். இவ்விழாவில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தெரிவித்ததாவது: உலகம் முழுவதும் வர்த்தக முறைகள் காலத்திற்கேற்ப தொடர்ந்து மாறிவருகின்றன. ஆரம்ப காலங்களில் நேரடி வர்த்தகம் நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இணையவழி மற்றும் கைப்பேசி செயலிகள் மூலம் பொருட்கள் வாங்கும் நடைமுறை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நுகர்வோரின் நலனை பாதுகாக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களும் காலத்திற்கேற்ப திருத்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசு பல்வேறு பாதுகாப்புச் சட்டங்களையும். உரிமைகளையும் உருவாக்கியிருந்தாலும், அவை பொதுமக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டுமெனில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம். குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம் சமூகத்தில் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

பொதுமக்கள் தங்களது உரிமைகள் மற்றும் சட்டப்பாதுகாப்புகள் குறித்து அறிந்திருந்தால்தான் ஏமாற்றும் வர்த்தக நடைமுறைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லையெனில், நேர்மையற்ற வணிக நடைமுறைகள் தொடரும் அபாயம் உள்ளது. இன்றைய தினம் துறை சார்ந்த அலுவலர்கள் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும், தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்குச் சென்று, இந்நிகழ்வில் விவாதிக்கப்பட்ட நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து சக மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். இதன் மூலம் அனைத்து மாணவர்களிடமும் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்படும்.

எனவே, உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா போன்ற நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், முதுநிலை மண்டல மேலாளர் ஜெயம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன், துணைப்பதிவாளர் (பொ.வி.தி) ஆ.இளங்கோவன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. நா. கலு சிவலிங்கம், தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் முருகன், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாகரன், தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஏகாம்பரம், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு உறுப்பினர் விஜயராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காமனூர்தட்டு மலைவாழ் மக்கள் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
திருச்சி அருகே அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
மல்லப்பாடி கிராமத்தில் குப்பை கழிவுகளை 10 ஆண்டுகளாக ஆற்றில் கொட்டும் அவலம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
போர்ப்ஸ் இந்தியா அன்ட் டி குளோபலிஸ்ட்டின் உலகளாவிய வணிக சாத்தியக்கூறுகள் கொண்ட 200 நிறுவனங்கள் பட்டியல்:இந்தியாவின் கல்ச்சர்லிடிக்ஸ் தேர்வு
குளச்சல் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

பல் சமய நட்புறவு கழகம்-தமிழக வெற்றி கழகம் இணைந்து நடைபெற்ற மத நல்லிணக்க மருத்துவ முகாம்!!!

July 27, 2026
14 Views
நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
இறைச்சிக்கழிவுடன் வந்த வாகனம் பறிமுதல்
5000 பனை விதைகள் விதைப்பு
அருமை இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account