ஈரோடு, ஆக. 4 –
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முகாசிபிடாரியூர், பனியம்பள்ளி அட்டவணை பிடாரியூர், அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
முகாபிடாரியூர், அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.89.22 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆயிரத்து பத்து குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சமையல் மற்றும் இருப்பு அறையினையும் பார்வையிட்டு மாணவர்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவு தயாரிக்கப்படுவதையும். சமையலறையின் தூய்மை குடிநீர் வசதி, உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, முகாசிபிடாரியூர் பருதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் நுண்ணுயிர் ரக்கூடம் மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மையம் ஆகியவற்றின் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மண்புழு உரம் தயாரிக்கும் மையத்தில் மண்புழு உற்பத்தி, மூலப்பொருட்களின் பயன்பாடு, உற்பத்தி அளவு மற்றும் உரத்தின் தரம் குறிந்தும் பார்வையிட்டார்.
தொடர்ந்து பணியம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புப்பாளையத்தில் அமைந்துள்ள உதயம் சிறப்புப் பள்ளியை பார்வையிட்டு, பள்ளியின் சமையலறை குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் செய்தி தொடர்புத்துறையின் சார்பில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தியாகி கொடிகாத்த குமரன் சிலை மற்றும் மணிமண்டப கட்டுமான பணியிணையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சென்னிமலை பேரூராட்சியில் சென்-கோப்-டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் போர்வை தயாரிக்கும் முறை குறித்தும், ஏற்றுமதி தயாரிக்கும் நேரம். விற்பனை குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கைத்தறி உதவி இயக்குநர் வெங்கடேசலு ஆய்வாளர் பிரபாகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் பிரதீப் கிஷோர், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவவர்கள் பாலமுருகன் ரவிச்சந்திரன் செயற்பொறியாளர் பாண்டியராஜ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



