ஈரோடு, ஆகஸ்ட் 4 –
ஆபாசமாக பேசியதாகக் கூறி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீரியமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு காளை மாட்டு சிலை அருகே ஈரோடு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய முன்னாள் அமைச்சர் முத்துசாமி: காவிரி நீர் திசை திருப்பும் விவகாரம், மாநிலத்தில் சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடி திரும்பப் பெற வலியுறுத்தியும், இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



