சுசீந்திரம், ஜூலை 28 –
நாகர்கோவில் அருகே சி.டி.எம்.புரத்தில் அமைந்துள்ள இவான்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் மாணவர் குழுத்தலைவர் “கௌரவ விழா” சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் வி.பி.மணி மற்றும் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் பி. வெல்பின் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக என்.ஜி.ஒ.காலனி இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஜோஸ்லின் ஞான கிறிஸ்டி மணி கலந்து கொண்டார்.பள்ளியின் முதல்வர் தி.தன சுஜி முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளியின் தலைமை மாணவ- மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து விளையாட்டு குழுக்கள் மற்றும் குழுக்கள் வாரியாக தலைமை மாணவ- மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் . நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர்கள் கண்ணன், செல்வி ஜோசப், ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



