ஈரோடு, ஜூலை 25 –
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஈரோடு காந்தி சிலை அருகே மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கோவை சையது கலந்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



