தஞ்சாவூர், ஜூலை 21 –
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் எதிர்ப் புறம் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் கர்நாடகா அரசு மேகதாது அணைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தவும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விடவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய ஜனநாயக கட்சி அயோக்கிய பொதுச்செயலாளர் முனைவர் காஷ் சண்முகம், மாநில துணை பொது செயலாளர் மாநில போராட்ட குழு செயலாளர் ஆனந்த முருகன் வழிகாட்டுதலின்படி மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர் எஸ். சிமியோன் சேவியர் ராஜ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை சட்டமன்ற தலைவர் ஆர்.ஸ்டீபன், ஆர்.கே சாமி வரவேற்பு உரையாற்றினார் ப.மு.ச.மா தலைவர் பி.எஸ். திருமாறன், திருவையாறு சட்டமன்றத் தலைவர் கே. ராஜகோபால், ஒரத்தநாடு சட்டமன்றத் தலைவர் கே. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு உரிய மாதாந்திர காவிரி நீரை கர்நாடக அரசு உடனே திறந்து விட வேண்டியும், தமிழ்நாடு அரசு தலையிட்டு நமக்கான உரிமையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க கோரியும், காவேரி பிரச்சனையில் நிரந்தர தீர்வு ஏற்பட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கல்லணை கால்வாய் கோட்டத்திற்கு உட்பட்ட முதலை முத்துவாரி நீர் தேக்கத்திற்கு கட்டளை கால்வாய் வாய்க்காலில் இருந்து பிரிவு வாய்க்கால் எடுத்து நாட்டாணி ஏரியில் நீரை நிரப்பினால் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களும் பயன்படும். இப்பொழுது உள்ள குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. எனவே தமிழக அரசு உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆர்.எஸ். கவியரசன், ஏ.ஜோசப் அமல்ராஜ், ஒரத்தநாடு சட்டமன்ற பொறுப்பாளர்கள் செந்தில்குமார், வி.அன்பழகன், திருவையாறு சட்டமன்ற பொறுப்பாளர்கள் வினோபா, எம். கணேசன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏ வடிவேல் கமலேஸ்வரன், முத்தமிழ்செல்வன், சீதாலட்சுமி குணசீலி, மேகலா ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் சட்டமன்ற பொருளாளர் கே முத்துகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.



