மார்த்தாண்டம், ஜூலை 13 –
மார்த்தாண்டதை அடுத்த குலசேகரம் திருவந்திக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனுஷா (33). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். பட்டதாரியான அனுஷா ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளியான சங்கர் (38) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக அந்த நட்பை அனுஷா துண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடன் நட்பை தொடருமாறு சங்கர், அனுஷாவை மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அனுஷா வீட்டில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். அதற்கு முன்னதாக அவர் துபாயில் உள்ள தனது கணவருக்கு செல்போன் மூலம் ஒரு குறுந்தகவல் அனுப்பி உள்ளார். இனி நான் வாழ விரும்பவில்லை. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். மகளை பார்த்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகேஷ் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டும், தொடர்பு கிடைக்காததால் உடனடியாக உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார். அங்கு உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது அனிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக குலசேகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமுறைவாக உள்ள தொழிலாளி சங்கரை தேடி வருகின்றனர்.



