By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டி
அரசியல்தமிழ்நாடுமதுரை

கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டி

Last updated: July 11, 2026 4:47 pm
July 11, 2026
11 Views
Share
SHARE

மதுரை, ஜூலை 11 –

ஸ்ரீபெரும்புதூரில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி நிகழ்ச்சி எதற்காக ரத்து செய்யப்பட்டதற்கு ஜெயின் கமிஷனிடம் இன்னும் இந்த கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை அதேபோல் கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்-அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி*

எடப்பாடி காலி செய்ய வேண்டும் துரோகி எடப்பாடி,பன்னீர்செல்வம் என்று சொல்லி தான் கட்சியை தொடங்கினார். 9ஆண்டு பன்னீர்செல்வத்தை துரோகி என்று சொல்லிவிட்டு அவரை முதல்வராக்க ஒரே எம்எல்ஏவை கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்றார். டிடிவிக்கு எல்லாம் தெரியும் அவர் காலத்திற்கு ஏற்றார் போல தண்ணி போவது போல் வளைந்து வளைந்து போகிறார்.

புரட்சித் தலைவர் காலத்தில் கூட அம்மா காலத்தில் கூட திமுக இந்த அளவிற்கு அழிவை சந்தித்ததில்லை. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கூட திமுக இந்த அளவிற்கு கிளைக் கழகம் வரை அளிந்தது இல்லை திமுகவிற்க்கு பேரழிவு இந்த அளவிற்கு வந்ததே இல்லை-அமைச்சர் சி டி ஆர் பேச்சு

திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் தனியார் மண்டபம் ஒன்றில் தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுக் கட்சி வழக்கறிஞர்கள் இணையும் விழா தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் செங்கோல் பரிசளித்தனர்.

மாற்றுக் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் இணைந்து வருகின்றனர் அதேபோல தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக அதிமுக நிர்வாகிகள் கிளைக் கழகத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து சேர்கிறார்கள் திமுக அதிமுகவிற்கு அரசியல் எதிர்காலமே கிடையாது. சுய லாபத்திற்காக இரண்டு பேரும் இணைந்து பயணிக்க தயாராக இருக்கும் காரணத்தால் இரண்டு தலைமை மீது நம்பிக்கை இழந்து மாற்றுக் கட்சியிலிருந்து வந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மரியாதை அங்கீகாரம் கொடுக்கப்படும்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றவர்கள் அழைத்து தவெக அரசு அமைச்சரவையில் இடம் கொடுத்திருப்பது நியாயம் என்றால் எந்த கூட்டணியும் நியாயம் தான் டிடிவி தினகரன் கூறியது கொடுத்த கேள்விக்கு:

இந்த பிரச்சனை எங்கிருந்து வந்தது என்று சொல்கிறேன்.எடப்பாடியும் ஸ்டாலினும் எப்போது சேர்ந்து பயணிக்க முடிவு செய்தார்களோ அதுதான் இந்த பிரச்சனை தொடங்கியது. டிடிவி தினகரன் எதற்கு கட்சி தொடங்கினார் எடப்பாடி காலி செய்ய வேண்டும் துரோகி எடப்பாடி துரோகி பன்னீர்செல்வம் என்று சொல்லி தான் கட்சியை தொடங்கினார். ஒன்பது ஆண்டு பன்னீர்செல்வத்தை துரோகி என்று சொல்லிவிட்டு அவரை முதல்வராக அவர் ஒரே எம்எல்ஏவை கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்றார். அவர் பேசலாமா இது நியாயமா. அவருடன் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்தனர் இன்று அவர்களை நடுத்தெருவில் நிற்கிறார்கள். எடப்பாடியும் ஸ்டாலினும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று மக்கள் கொடுத்த தீர்ப்பா எங்கள் தலைவர் முதல்வராக வேண்டும் என்று தான் மக்கள் தீர்ப்பு கொடுத்தார்கள். மக்களை ஏமாற்ற இவர்கள் நடந்து கொண்டதால் தான் அந்த கூட்டணியில் இருந்து நேர்மையாக பயணிக்க முடியாமல் வெளியே வந்தனர். இதை அவர்களாலே மறுத்து பேச முடியவில்லை.

ஸ்டாலினை காதர் மைதீன் உள்ளிட்டவர்களுக்கு போன் செய்து எடப்பாடி முதல்வராக வேண்டும் என்று சொன்னார்கள் இதை விட கேவலமான அரசியல் எங்கு உள்ளது. அண்ணன் டிடிவி எல்லாம் புரியும் அவர் காலத்திற்கு ஏற்றார் போல தண்ணி போவது போல் வளைந்து வளைந்து போகிறார். அவரின் போதாத காலம் யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அந்த எடப்பாடி முதல்வராக்க கவர்னர் மாளிகை போல் நின்றார். அவருக்கான மரியாதையை பொதுத்தளத்தில் இழுந்து விட்டார் கொஞ்ச நாள் அவர் பேசாமல் இருந்தால் இருக்க மரியாதையை தக்க வைத்துக் கொள்ளலாம்.

அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முதலிடம் மத்திய அரசு உத்தரவு குறித்த கேள்விக்கு:

தமிழகத்தில் என்ன பின்பற்றுகிறோமோ அதைத்தான் பின்பற்ற போறோம் மேற்கு வங்கத்தில் பதவியேற்பு விழாவில் போது அந்த மாநில பாடல் தான் முதலில் ஒழிக்கப்பட்டது. தமிழகத்தில் நமக்கென்று ஒரு வழிகாட்டுதல் உள்ளது அதன்படி தான் செயல்படுவோம் அதில் மாற்றுக்கருத்து இல்லை தமிழ் தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயர்ந்தவர்களுக்கு அரசு பணி
கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு:

எந்தெந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என முதல்வர் ஆலோசித்து செய்வார்கள் பல இடங்களில் இது போல துரோகங்கள் நடைபெற்று உள்ளது. ஸ்டெர்லைட் குறித்து பேசிய திமுக அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கரூர் உயிரிழந்த சம்பவம் பணி ஆணை வழங்கியதில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்த கேள்விக்கு:

கரூர் உயிரிழப்பு மிகப்பெரிய சதியின் வேலைப்பாடு. கட்சியின் சார்பாக அவர்களுக்கு உதவி செய்யப்பட்டது. சதி திட்டத்தால் நிகழ்த்தப்பட்டது இதை யாரும் மறக்க மாட்டோம். இடைத்தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை ஒட்டுமொத்த கட்சியும் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் மக்களின் ஆதரவு உள்ளது. யார் உண்மையான தலைவர் சுயநலவாதியார் ஊழல்வாதி யார் என்று மக்களுக்கு தெரியும். பணி நியமனம் ஆணை வழங்கியது சரிதான்

கரூர் துயரசம்பவத்தில் யார் ஓடினார்கள் என்று கரூர் மக்களுக்கு தெரியும் என செந்தில் பாலாஜி கூறியது குறித்த கேள்விக்கு:

கரூரில் இருந்த எஸ் பி என்னோடு தான் இருந்தார் எஸ்.பி.கே தெரியாத விஷயம் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரியும். எஸ் பி யிடம் நானும் கேட்டேன் என்ன நடைபெற்றது. என விவரம் கேட்டேன் அப்படி எதுவும் இல்லை சிலர் மயங்கி விட்டதாக சொன்னார். அவர்கள் அனைவரும் ஜிஹெச் அருகில் ரூம் போட்டு காத்திருந்தார்களா. திமுக போன்ற கட்சிக்கு பதில் தெரியாத நிறைய கேள்விகள் இன்னும் உள்ளது.

ராஜீவ் காந்தி இறந்தபோது திமுக தலைவரின் கூட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்தது. அந்த கூட்டம் எதற்கு ரத்து செய்யப்பட்டது என அப்போதைய விசாரணை ஆணையத்தில் கேள்வி உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி நிகழ்ச்சி எதற்காக ரத்து செய்யப்பட்டதற்கு ஜெயின் கமிஷனிடம் இன்னும் இந்த கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை அதேபோல் கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்.

நீர் நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் மதுரை மருது பாராட்டு கொடுத்த கேள்விக்கு: அரசு மக்களுக்காக செயல்படுகிறது இயற்கை தான் முக்கியம் இயற்கையை அழித்துவிட்டு வளர்ச்சி கொடுக்க முடியாது எங்கெல்லாம் இயற்கைக்கும் மக்களுக்கும் எதிரான ஒரு விஷயம் வருகிறதோ அப்போது தமிழக அரசு தானாக முன்வந்து வேலையை செய்யும். ஒரு நாளைக்கு அனைத்து அமைச்சர்களும் 12, 13 மணி நேரம் வேலை செய்கிறார்கள் முதல்வர் 14 மணி நேரத்திற்கு மேல வேலை செய்கிறார்.

திமுக பலவீனம் அடைந்து விட்டதா என்கிற கேள்விக்கு: திமுக அதிமுகவை கேலி செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை அந்த நிலைமைக்கு சென்றதற்கு காரணம் அவர்கள் தான். அவர்களை கேலி செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அது அவர்களின் சுயநல முடிவு இதை நோக்கி தான் சொல்வார்கள் என்று எங்களுக்கு முன்னாடியே தெரியும்.

வைகை ஆறு தூர்வாரும் பணி குறித்த கேள்விக்கு: வைகை ஆறு தூர்வாரும் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளது. முழுவதும் தூர்வாரும் பணிக்கான உத்தரவுகளுக்கு மத்திய அரசு கொடுப்பதற்காக காத்திருக்கிறோம்.

மத்திய அரசை எதிர்ப்பதற்கு திமுக தாகா ஓரணியில் இணைய வேண்டும் என திருமா கருத்து குறித்த கேள்விக்கு:

எங்கெல்லாம் எதிர்க்க வேண்டுமா அப்போது நூறு சதவீதம் எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறோம். தமிழக மக்களுக்கு எதிராக மத்திய அரசு வந்தாலும் முதல் குரல் தமிழக வெற்றிக்கழகம் கொடுக்கும். ஒன்றிய அரசு மக்களுக்கு எந்த விரோத செயலை செய்தாலும் தமிழக வெற்றி கழகம் குரல் கொடுக்கும் அப்படித்தான் முந்தைய காலங்களில் இருந்தும் எந்தவித சமாதானமும் தலைவர் செய்து கொள்ள மாட்டார்.

திருமாவில் கருத்தை வரவேற்பவராக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு:

கொள்கை எதிரி தெளிவாக சொல்லிவிட்டோம் அதில் சமாதானம் இல்லை எவ்வளவு சர்ச்சைகள் பொய்யான பிரச்சாரங்கள் திமுகவினர் செய்தனர் அதனை தாண்டி தான் இங்கு வந்துள்ளோம் கொள்கை ரீதியாக அரசியல் ரீதியாகவோ எந்த சமாதானத்தையும் முதலமைச்சர் செய்ய மாட்டார்.

முன்னதாக வழக்கறிஞர்கள் இணைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேசும்போது:

புரட்சித் தலைவர் காலத்தில் கூட அம்மா காலத்தில் கூட திமுக இந்த அளவிற்கு அழிவை சந்தித்ததில்லை. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கூட திமுக இந்த அளவிற்கு கிளைக் கழகம் வரை அளிந்தது இல்லை திமுகவிற்க்கு பேரழிவு இந்த அளவிற்கு வந்ததே இல்லை. அதிமுகவுக்கு 1996 இல் இடுக்கமான சூழல் ஏற்பட்டது கூட தொண்டர்கள் அம்மாவுடன் இருந்தார்கள். இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் வெளியே சென்றார்கள் ஆனால் இப்போது திமுக அதிமுகவில் இருக்கும் பெரும்பாலான தொண்டர்கள் வெளியேறி வருவதற்கு காரணம் இரண்டு தலைவர்களும் இதைவிட குடும்பம் முக்கியம் என்று யோசித்தானால் தான் வெளியேறினார்கள்.

அத்தனை ஆண்டு எதற்காக அரசியல் செய்தார்களோ அதை மறந்து சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள இப்படி ஒரு சுயநலமான முடிவை யாரும் எடுத்ததில்லை. இவர்கள் செய்த அமல்களில் இருந்து தப்பிப்பதற்கு, தலைமை மீது இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க முதல்வராக பாடுபடுகிறார்கள் என்றால் அவரை நம்பி எப்படி தொண்டர்கள் பயணிப்பார்கள். நாளை இன்னும் நெருக்கடி ஏற்பட்டால் இவர்கள் கட்சியை கொண்டு போய் பாஜகவில் இணைக்கவும் தயங்க மாட்டார்கள். கடுமையாக முப்பது நாற்பது ஆண்டுகளாக உழைத்தவர்கள் அந்த கட்சியில் இருந்து வெளியேறுகிறார்கள். திமுக அமைச்சர்கள் தற்போது அப்ஸ்காண்டில் உள்ளார்கள். இந்த நேரத்தில் யாராவது லண்டன் போவார்களா ஸ்டாலின் லண்டன் சென்று விட்டார். யார் எப்படி போனால் என்ன குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலா சென்று விட்டார். திமுக அதிமுகவின் சேர்ந்தவர்கள் அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் மக்களை சந்திக்கவே முடியாது. இரண்டு கட்சியும் சுயநலமாக எடுத்த முடிவால் பலர் மாற்றுக் கட்சியிலிருந்து வந்து இணைகின்றனர். கட்சியில் என்ன நோக்கத்தோடு சேர்கிறீர்களோ உங்களுக்கு அனைத்து கௌரவம் மரியாதை கொடுக்கப்படும். மக்களோடு பயணிக்க கூடிய ஒரே கட்சி தமிழக வெற்றி கழகம் தான்.

உள்ளாட்சித் தேர்தலில் தமிழக முழுவதும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் நின்று மக்களின் பெருவாரியான ஆதரவோடு வெற்றி பெறுவார்கள். வெற்றி பெற்று அனைத்து தேவைகளையும் மக்களுக்காக செய்வார்கள். ஏற்கனவே இருபது ஆண்டுகளாக மக்களோடு நமது நிர்வாகிகள் நலத்திட்ட உதவி செய்து வருகிறார்கள். 30 ஆண்டுகளாக பொதுவாழ்வில் பயணம் செய்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு கொடுத்தால் இன்னும் சிறப்பாக பயணிப்பார்கள். திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கவுன்சிலர் ஆவதற்கு முன்பு எவ்வளவு சொத்து வைத்திருந்தீர்கள் அதன் பிறகு எவ்வளவு சொத்து வைத்திருக்கிறீர்கள் என்று சொத்து பட்டியலை வெளியிட முடியுமா. ஒவ்வொரு ரோட்டோர கடைகளிலும் திமுக கவுன்சிலர்கள் வசூல் செய்கிறார்கள். ஆனால் மக்கள் முதல்வர் சொன்னதைப் போல யாருக்கும் எதுவும் லஞ்சம் கொடுக்காதீர்கள். விரைவில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தல் வரும் அனைவரும் தயாராக இருங்கள் என்று உரையை நிறைவு செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீ செல்வசித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் திருக்கோயில்களில் கும்பாபிஷேக விழா
அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.70
மாத்தூர் தொட்டிப்பாலம் முகப்பில் தேர்தல் விழிப்புணர்வு பதாகை: மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
விளாத்திகுளம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மீனவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

கம்பத்தில் புதிய கடை திறப்பு விழா

August 4, 2024
126 Views
பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாண போராட்டம்
உழவரைத்தேடி – வேளாண்மை உழவர் நலத்துறைமாவட்ட ஆட்சியர் தகவல்
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி 154-வது பிறந்த நாள் விழா
வியாபாரிகள் சங்க போராட்டத்திற்கு SDPI முழு ஆதரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account