தென்தாமரைகுளம், ஜூலை 10 –
கேரள மாநிலம் முதல்வர் சதீசனை அய்யா வழி சமய தலைவர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் திருவனந்தபுரத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது கடந்த ஆட்சியில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தின் அருகில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கியது. அந்த பணியை விரைந்து முடிக்க கேட்டும், திருவனந்தபுரத்தில் இருந்து சாமிதோப்பு வழியாக கன்னியாகுமரிக்கு கேரளா அரசு பஸ் இயக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் அந்த பஸ் நிறுத்தப்பட்டது.
மீண்டும் அந்த பஸ்ஸை இயக்க கேட்டும், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு அய்யாவை வழிபட முதல்வரை அழைத்தனர். அப்போது சாமிதோப்பிற்கு வருவதாக முதல்வர் உறுதியளித்ததாக பால.பிரஜாபதி அடிகள் கூறினார். முதல்வர் சந்திப்பு நிகழ்ச்சியில் ராமபத்திரன் மற்றும் பேராசிரியர் தர்ம ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.



