நாகர்கோவில், ஜூலை 01 –
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் மாவட்டத்தில் சட்ட விரோதச் செயல்களைத் தடுத்தது, மதுவிலக்கு அமலாக்கம் மற்றும் குற்றச் சம்பவங்களைக் குறைப்பதில் காட்டிய தீவிரமான செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் விருது வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் சாய்குமார் உட்பட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



