கிருஷ்ணகிரி, ஜூன் 29 –
கிருஷ்ணகிரி நகரில் 2009 முதல் செயல்பட்டு வரும் சேலஞ்ச் கோச்சிங் சென்டர் சார்பில் முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாள் விழா, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தேர்வு கூட நுழைவுச்சீட்டு வழங்குதல், சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதும் மாணவ–மாணவிகளுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) வழங்கப்பட்டதுடன், கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர் ஜி.சுரேஷ், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர். முரளிவிஜய், நகரத் தலைவர் சசிகுமார், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ஜி.பார்த்திபன் மற்றும் காப்பாட்சியர் சி.சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி, தேர்வில் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியை சேலஞ்ச் கோச்சிங் சென்டர் நிறுவனர் எஸ். மோகன்குமார், ஒருங்கிணைத்து நடத்தினார். கடந்த 17 ஆண்டுகளாக கல்விச் சேவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சேலஞ்ச் கோச்சிங் சென்டரின் இந்த முயற்சிக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்தஇந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகளான வேலன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



