By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகள் பெயரில் பகல்-இரவாக அரங்கேறும் மண் கொள்ளை: காவேரிப்பட்டணம் அருகே ஏரிகள் பாழாவதாக பொதுமக்கள் குமுறல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > விவசாயிகள் பெயரில் பகல்-இரவாக அரங்கேறும் மண் கொள்ளை: காவேரிப்பட்டணம் அருகே ஏரிகள் பாழாவதாக பொதுமக்கள் குமுறல்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

விவசாயிகள் பெயரில் பகல்-இரவாக அரங்கேறும் மண் கொள்ளை: காவேரிப்பட்டணம் அருகே ஏரிகள் பாழாவதாக பொதுமக்கள் குமுறல்

Last updated: June 26, 2026 8:03 pm
June 26, 2026
27 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 26 –

தட்ர அள்ளி கிராமத்தில் அடுத்தடுத்து இரண்டு பெரிய ஏரிகள் அமைந்துள்ளன. இந்த ஏரிகளில் அரசாணையை முற்றிலும் மீறி, ஜே.சி.பி (JCB) எந்திரங்கள் மூலம் இரவு பகலாக ஏரியின் மார்பு பிளக்கப்பட்டு, ஆழமாக மண் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதி அளிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு கூடுதலாக, பிரம்மாண்ட டிப்பர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் மண் கடத்தப்பட்டு வருகிறது.

பகல் நேரத்தில் விவசாய நிலங்களில் கொட்டப்படுவது போல் கொட்டிவிட்டு, இரவு நேரங்களில் அதே மண்ணை டிராக்டர்கள் மூலம் பல்வேறு வணிக இடங்களுக்கு எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏரிகளில் விதிகளை மீறி ராட்சத எந்திரங்கள் கொண்டு ஆழமாகத் தோண்டுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏரியின் சமதளம் பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கிணறு போல ஆழமான பள்ளங்கள் ஏற்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் ஏரி முழுவதும் பரவலாகத் தேங்காமல், அந்தப் பள்ளங்களுக்குள் மட்டுமே முடங்கிவிடும். ஏரிப் பரப்பு முழுவதும் தண்ணீர் தேங்காததால், சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாய வேண்டிய பாசன நீர் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.

மேலும் நீர் பரவாமல் போவதால் சுற்றியுள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாகச் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களும் பலமுறை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இதுவரை எந்தவொரு அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிடவோ அல்லது மண் அள்ளுவதைத் தடுக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதிகாரிகளின் இந்த மௌனம், மண் கடத்தல் காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் பலப்படுத்தியுள்ளது. அரசின் சலுகையைத் தவறாகப் பயன்படுத்தி, ஏரிகளை அழித்து, எதிர்கால விவசாயத்தைக் கேள்விக்குறியாக்கும் இந்தச் சட்டவிரோத மண் கடத்தலை கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் உடனடியாக சிறப்புப் படைகளை அனுப்பி, தட்ரஹள்ளி ஏரிகளில் ஆய்வு மேற்கொண்டு, விதிமீறலில் ஈடுபட்ட எந்திரங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், இதற்குத் துணையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், தட்ரஹள்ளி கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கிள்ளியூர் திமுக சார்பில் சமத்துவ கோலப் போட்டி
தவெக – காங்கிரஸ் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளதையடுத்து காவேரிப்பட்டினத்தில் இனிப்புகள் வழங்கிக் கொண்டாட்டம்
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா
மார்த்தாண்டம் அருகே பெண் நடன கலைஞரை திருமணம் செய்து கொள்ளவதாக கர்ப்பமாக்கிய இன்ஜினியர் கைது
93 மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

இழப்பீடுத்தொகை ரூபாய் 80,84,491க்கான காசோலை

July 5, 2024
137 Views
பெண் நடன கலைஞர்கள் 2 பேர் விபத்தில் பலி
28 மாணவர்கள் தொடர்ந்து 20 நிமிடம் யோகா செய்து குளோபல் புக் ஆப் யோகா ரெக்கார்ட்ஸில் புதிய சாதனை
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா
ஜூனோ ஜெனரல் இன்சூரன்ஸ், ‘இந்தியா சாலைப் பாதுகாப்பு – 2026 அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account