தருமபுரி – 04
தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு விவசாயிகள் கடன் தள்ளுபடி அறிவிப்பில் உள்ள குளறுபடிகளை நீக்கி விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கையில் திருவோடு ஏந்தியும், நெற்றியில் நாமமிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக முதலமைச்சர் சிறு விவசாயிகளின் கூட்டுறவு கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் மற்ற விவசாயிகளின் கூட்டுறவு கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்தார்கள். ஆனால் அண்மையில் தமிழக அரசின் விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகளின் நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது.
எனவே சிறு விவசாயி, பெரு விவசாயி என்ற பாகுபாடு இன்றி விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறி தமிழக அரசு வலியுறுத்தி நெற்றியில் நாமம் போட்டும், கையில் தெருவோடு ஏந்தியும் , வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே, விவசாயிகளை வஞ்சிக்காதே, தள்ளுபடி செய் தள்ளுபடி செய் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய் என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தருமபுரி மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்தலாக கலந்து கொண்டனர்.



