தஞ்சாவூர், மே 30 –
மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என இடதுசாரிகளில் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்டும் திட்டத்தை தடுக்க கோரி, தஞ்சாவூரில் தலைமை தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சி பி ஐ (எம் எல்) லிபரேஷன் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்ததாவது: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவதற்கான தொடர் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் காவிரியை நம்பி உள்ள தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கடுமையான பாதிக்கப்படும் உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு விரோதமாக கர்நாடக அரசு செயல்படுகிறது. இத்தீர்ப்பை மீறி திட்ட அறிக்கை தயாரிப்பது, பூமி பூஜை போடுவது, கட்டியே தீருவோம் என சவால் விடுவது போன்றவை இரு மாநிலங்களுக்கு இடையே நல்லுறவை கெடுக்கக்கூடிய செயல், இது மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு எவ்வித சமரசம் இல்லாமல் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மேலும் சட்ட ரீதியான வாய்ப்புகள் என்ன என்பதை தமிழக அரசு யோசிக்க வேண்டும். தமிழ் நாட்டின் மிக முக்கியமான பாசன குடிநீர் ஆதாரமான காவிரியை பாதுகாக்கவும், காவிரி மீதான நம்முடைய உரிமைகளை காக்கும் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்திய ஆலோசனை பெற வேண்டும் என்றார்.
பேஷன் முகம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்ததாவது: மேகதாவுக்கு அணை கட்டுவது இரு மாநிலங்கள் நட்புணர்வை கேள்விக்குறியாக்கும். இந்த பிரச்சினையை தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டுதல் இருக்கிறது. முந்தைய அரசுகள் பின்பற்றிய வழிகாட்டுதல்களை இப்போது அரசு பின்பற்ற வேண்டும் என்றார்.
அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் சின்னை பாண்டியன், மாவட்ட செயலாளர் சக்திவேல், சிபிஐ (எம் எல்) மாவட்ட செயலாளர் மாசிலாமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், சிபிஐ (எம்எல்) மாநில நிலை குழு உறுப்பினர் சிம்சன், நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து, லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.



