By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வங்கியில் அடகு வைக்க அழைத்து சென்று பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வங்கியில் அடகு வைக்க அழைத்து சென்று பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வங்கியில் அடகு வைக்க அழைத்து சென்று பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி: 3 பெண்கள் மீது வழக்கு பதிவு

Last updated: May 20, 2026 5:05 pm
May 20, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 20 –

நாகர்கோவில், கோட்டார் கீழராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் (52) மீன்பிடி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கோபி. இரு குடும்பத்தாருக்கும் சுமார் 20 ஆண்டுகளாக பழக்கம் உள்ளது. பிராங்கிளின் தனது குடும்ப தேவைக்காக தங்க நகைகளை மனைவி சீதாவிடம் கொடுத்து அடகு வைக்க கூறுவது வழக்கம். சீதாவுக்கு சரிவர விவரங்கள் தெரியாததால் அவருக்கு உதவியாக கோபி மனைவி சுசிலாவை வங்கிக்கு உடன் அழைத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சீதா அடகுவைத்த பணம் ரூ.11 லட்சத்தை வேறு வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டு இருந்தது. இது குறித்து சீதாவுக்கு எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த 25.10.2025 அன்று உடல் நலக்குறைவு காரணமாக சீதா மரணம் அடைந்தார். அவர் இறந்த பிறகு தான் சீதாவின் நகை அடகு வைத்து பெறப்பட்ட ரூ. 11 லட்சம் வேறு வங்கி கணக்கு மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இது தொடர்பாக பிராங்கிளின் குடும்பத்தினர் விசாரித்த போது, சீதாவுடன் வங்கிக்கு சென்ற கோபி மனைவி சுசீலா, அதே பகுதியை சேர்ந்த பிந்துஷா, இந்து ஆகியோர் சேர்ந்துதான் பணத்தை பிந்துஷா வங்கி கணக்கில் மாற்றியது தெரிய வந்தது. இது குறித்து அறிந்ததும் பிராங்கிளின் குடும்பத்தினர் சென்று பணத்தை கேட்டபோது ஏற்கனவே பணத்தை கொடுத்துவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லாததால், இதையடுத்து பிராங்களின் தனது மனைவியை ஏமாற்றி சுசிலா 11 லட்சம் நம்பிக்கை மோசடி செய்து திருடி விட்டதாக நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் நேசமணி நகர் போலீசார் தற்போது சுசீலா, பிந்துஷா, இந்து ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின் தான் இது தொடர்பான விவரங்கள் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட 8 சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபடும் 12 ஆயிரம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
ராஜகோபால சுவாமி பாமா – ருக்மணி தெப்ப திருவிழா
மயிலாடி றிங்கல் தெளபே பள்ளியில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: விஜய் வசந்த் எம் பி திறந்து வைத்தார்
மாத்தூர் தொட்டிப்பாலம் முகப்பில் தேர்தல் விழிப்புணர்வு பதாகை: மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
தலக்குளம் குழுவுக்கு முதல் பரிசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

சுருளிப்பட்டி ஊராட்சியின் அவலம்

May 23, 2024
140 Views
மார்த்தாண்டம் எம்.பி அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்.பி
ஜெகதேவி ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்
நித்திரவிளை அருகே பள்ளி மாணவி பலாத்காரம்; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account