தருமபுரி, மே 15 –
தருமபுரி மாவட்டத்திற்கு புதிதாக இரண்டு மாவட்ட செயலாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். புதிய மாவட்ட செயலாளர்கள் டி.ஆர்.அன்பழகன் மற்றும் ஆர்.அசோக்குமார் இருவரும் தருமபுரி நகரில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, கட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஊர்வலமாக வரவேற்பு அளித்தனர். இதில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சிங்காரம், அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



