By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் மாம்பழ குடோன் மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் மாம்பழ குடோன் மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் மாம்பழ குடோன் மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு

Last updated: May 8, 2026 6:49 pm
May 8, 2026
6 Views
Share
SHARE

தருமபுரி, மே 08 –

தருமபுரியில் மாம்பழ குடோன் மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் வரும் காலங்களில் மாம்பழங்கள் விற்பனை வரத்து அதிகரிக்கும் என்பதால் இயற்கையான முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகின்றனவா, உடல் நலத்துக்கு பாதிப்பு உண்டாக்கும் வகையில் செயற்கையான முறையில் ரசாயன திரவம் (எதிபான் மற்றும் எதியோபான்) எத்திலின் ரீபைனர் பவுடர் நேரடியாக பழங்களில் வைத்தல் முறை மற்றும் கார்பைட் கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படுகின்றவா என கண்காணித்து, அவ்வாறான செயல்கள் காணும்பட்சத்தில் அவ்வணிகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டதன் அடிப்படையிலும், தருமபுரி மாவட்ட நிர்வாகத்துக்கு வந்த புகார் அடிப்படையிலும் கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் மாம்பழம் மற்றும் குளிர்பானங்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தலைமை மற்றும் மேற்பார்வையில் ஒன்றியம் வாரியாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தருமபுரி உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில் தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை மற்றும் சந்தைப்பேட்டை, திருப்பத்தூர் ரோடு, பென்னாகரம் ரோடு, பழையபேருந்து நிலையம், பாரதிபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மாம்பழம் மொத்த விற்பனை குடோன்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் உழவர் சந்தையில் ஒரு கடையில் தரமற்ற சந்தேகத்திற்கு இடமான பழங்கள் சுமார் 20 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டு வாங்கும் இடம் நபர்கள் குறித்து தெரிந்து வாங்கி விற்பனை செய்வதை கண்காணித்திட உழவர் சந்தை நிர்வாக அலுவலரிடமும், விற்பனை விவசாயி இடமும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சந்தப்பேட்டை பகுதியில் ஆய்வு செய்ததில் இரண்டு மொத்த வியாபாரிகளிடம் ரசாயன திரவங்கள் தெளித்து பழுக்க வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் சுமார் 100 கிலோ அளவிலானது பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரசாயன திரவம் மற்றும் கலவை கலந்த பாட்டில் ஸ்பிரேயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சேர்க்கை முறையில் பழுத்த பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 மற்றும் 2,000 உடனடி அபராத விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டது.

பேருந்து நிலைய பகுதியில் உள்ள பழக்கடைகள் ஆய்வு செய்ததில் ஒரு கடை குடோனில் ரசாயனம் பவுடர்கள் காணப்பட்டது. ஆனால் மாம்பழங்கள் ஏதும் காணப்படவில்லை இன்று அல்லது நாளை காவேரிப்பட்டினம் பகுதியில் இருந்து கொள்முதல் செய்து பழங்கள் வரலாம் என விற்பனையாளர் தெரிவித்தார். பவுடர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து உரிமையாளரை எச்சரித்து உடனடி அபராதம் ரூபாய் 2,000 விதிக்கப்பட்டது.

நுகர்வோர்கள் மாம்பழங்கள் இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டுள்ள பழங்களா என அறிய ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அந்த நீரில் பழுத்த பழங்களை போடும்போது பழங்கள் மேலே மிதந்தால் அது சேர்க்கை முறையில் பழுத்தவை, இயற்கையானவை பாத்திரத்தில் அடியில் போய் தங்கும் என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார். இதே போல் பழங்களின் பின்பகுதி (காம்பு) பகுதியில் நுகரும்போது இயற்கையான பழுத்த பழங்கள் பழவாசனை வீசும், செயற்கை எனில் அந்த இடம் சாம்பல் பூசினார் போல் இருக்கும். மருந்து வாசனை அடிக்கும் மேலும் பழங்கள் ஒரே சீராக மஞ்சளாக இருந்தால் அது சேர்க்கை முறையில் பழுத்த பழங்கள் என அறிந்து கொள்ளலாம்.

மேலும் பழங்கள் அறிந்தால் சதைப்பகுதி வெள்ளையாக காணப்பட்டாலும் அது சேர்க்கை முறையில் பழுத்தவை என அறியலாம் விழிப்புணர்வு செய்தி தெரியப்படுத்தினர். மாவட்ட முழுவதும் தொடர்ச்சியாக ஆய்வுகள் தொடரும் ஆய்வில் விதிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நியமன அலுவலர் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் சேர்க்கை முறையில் பழங்கள் விற்பனை செய்வது கண்டால் 9444042322 என்ற எண்ணிற்கு தகவல், புகார் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
தீ குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு.
நாகர்கோவில் கவுன்சிலர் மனைவி, மகன் மீது அரிவாளை காட்டி கொலை மிரட்டல்; தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு
களியக்காவிளை அருகே சிவபார்வதி கோயிலில் 7 வது அதிருத்ர மகாயக்ஞம் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் மூன்று வெவ்வேறு வாகன விபத்துக்கள் வழக்கில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஒரு கோடியே 94 லட்ச ரூபாய் இழப்பீடு

September 13, 2025
35 Views
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்‌
காரப்பட்டு யுனிக் கலைக்கல்லூரியில் விளையாட்டு தினம்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடத்தப்படும்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account