ராஜாக்கமங்கலம், மே 2 –
ராஜாக்கமங்கலம் அருகே அம்மாண்டி விளை பகுதியில் உள்ள அம்மன் தெருவை சேர்ந்தவர் நாராயண பெருமாள் மகன் ஜான்சன். எலக்ட்ரிக்கல் இன்ஜினியர். இவரது வீட்டின் முதல் மாடியில் உள்ள சமையலறையில் நேற்று இரவு கேஸ் கசிந்துள்ளது. இதை நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனால் நிறுத்த முடியவில்லை.
உடனடியாக ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவத்திற்கு விரைந்து வந்த நிலைய அதிகாரி சுயம்பு சுப்புராமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கசிந்து கொண்டிருந்த கேஸ் சிலிண்டரை திறந்த வெளிக்கு கொண்டு வந்து அதை சரி செய்தனர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதை அடுத்து விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


