By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா முதலிடம்: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை போட்டியிட செய்து தட்டி தூக்க போகும் அறிவாலயம் உற்சாகத்தில் தொண்டர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா முதலிடம்: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை போட்டியிட செய்து தட்டி தூக்க போகும் அறிவாலயம் உற்சாகத்தில் தொண்டர்கள்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா முதலிடம்: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை போட்டியிட செய்து தட்டி தூக்க போகும் அறிவாலயம் உற்சாகத்தில் தொண்டர்கள்

Last updated: February 18, 2026 5:23 pm
February 18, 2026
29 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப்ரவரி 18 –

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் யார்? என்ற கழக உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்பில் தற்போது முன்னணியில் இருப்பவரும் பேசு பொருளாகவும் மாறி இருப்பவர் நாகர்கோவில் மாநகராட்சியின் துணை மேயர் மேரி பிரின்சிலதா ஆவார்.

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட கட்சி தலைமை தனக்குத்தான் சீட் ஒதுக்கும் என சில முக்கிய நபர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த முறை நாகர்கோவில் தொகுதியை இழக்க திமுக தலைமை விரும்பவில்லை. மாறாக ஒரு பெண் வேட்பாளரை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறக்கி வெற்றி வாகை சூட முடிவு செய்து அதற்கான பணியையும் ரகசியமாக செய்து முடித்துள்ளதாக மூத்த கழக உடன்பிறப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாவட்டம். இதில் மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி மிக முக்கியமான தொகுதியாக பார்க்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் தொகுதியில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக நாகர்கோவில் மாநகராட்சியின் துணை மேயர் மேரி பிரின்சிலதாவை களமிறங்க தலைமை முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

வாக்காளர்களை கவரும் தேர்தல் அறிக்கைகள்:

தமிழக தேர்தல் களத்தை பொருத்தவரை வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை என்பது எப்போதுமே மிக முக்கியம் வாய்ந்தவையாக திகழும். அதன் அடிப்படையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் திமுகவும் அதிமுகவும் அதி தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த தேர்தல் அறிக்கையின் போது திமுக அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெரிதளவில் பொதுமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த திட்டம் திமுக ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருந்தது என்றே கூறலாம்.இத்திட்டத்ததை திமுக அரசு கனகச்சிதமாக நிறைவேற்றியும் வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியின் மூலம் மாநிலம் முழுவதும் வளர்ச்சித் திட்டங்கள் தீவிரமாக நடைமுறைக்கு வருகின்றன. விடியல் பயணம், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன”

அவற்றில் முக்கியமாக ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ இந்திய அளவிலும் கவனம் பெற்றுள்ளது. மாதந்தோறும் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிப்ரவரி-ஏப்ரல் மாதங்களுக்கு சேர்த்து ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000 என மொத்தம் ரூ.5000 வழங்கப்பட்டது. மேலும், மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் இந்தத் தொகை மாதம் ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்ற உறுதியையும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் அதிமுகவும் தற்போது வரை இரண்டு கட்டமாக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீச தொடங்கியுள்ளது. இதற்கு ஈடுகொடுத்து வாக்காளர்களை தங்கள் வசபடுத்த திமுக தலைமை தேர்தலை அறிக்கை தயாரிக்கும் பணிகளில் மும்முறமாக செயலாற்றுவதுடன் வேட்பாளர்கள் தேர்விலும் எந்தவித குளறுபடியும் நடந்து விடாதபடிக்கு கனகச்சிதமாக வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளது.

கூட்டணி :

தேர்தலில், இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் கூட்டணி கணக்குகள் இடம் பெறுகின்றன. வலுவான கூட்டணியாக இருந்து வரும் திமுக வுக்கு அதன் கூட்டணி கட்சிகள் பல நெருக்கடிகளை கொடுத்தாலும் அனைத்தையும் சமாளித்து வலுவான கூட்டணியுடன் தேர்தல் களம் காண உள்ளது. அதேபோல் திமுக கூட்டணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணியும் அமைந்துவிட்டது என்றே கூறலாம். தற்போது வரை 50-50 என்ற சூழலில் தான் இருகட்சிகளின் கூட்டணியும் அமைந்துள்ளது.

எனவே இந்த தேர்தலில் திமுக தனது பலத்தை நிரூபிப்பதற்காக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என உறுதியுடன் தெரிவித்து அதற்கு உண்டான பணிகளையும் செய்து வருகிறது.

வேட்பாளர் தேர்வு:

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிளுக்குமே தங்கள் கட்சிகளுக்குள்ளேயே கோஷ்டி பூசல் வலுவாக உள்ளது.
எனவே தேர்தலில் வெற்றி பெற ,தேர்தல் அறிக்கை, கூட்டணி கணக்குகள் எனவுள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக வேட்பாளர் தேர்வு மிக முக்கிய அம்சங்களாக உள்ளது. வாக்காளர்களின் மத்தியில் நற்பெயருடன், கழகத்திற்காக பணியாற்றி உடன்பிறப்புகளை அரவணைத்து எல்லோராலும் அறியப்பட்ட வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகிறது திமுக தலைமை.

கரணம் தப்பினால் மரணம் என்ற கணக்கில் வேட்பாளர் தேர்வு இருந்து வரும் நிலையில், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக தீவிரம் காட்டி வரும் பட்டியலில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக அவர்கள் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவர்களில் யாரை வேட்பாளராக களம் இறங்கினாலும் வெற்றி என்பது எட்டாக்கனி மட்டுமே என்பதை உணர்ந்த திமுக தலைமை,கோஷ்டி பூசலில் சிக்கிகொள்ளாத மற்றும் சொந்த செல்வாக்கு அதிகம் உள்ளவரும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் ஆதரிக்கும் வேட்பாளராக களம் இறக்க வேண்டும் என்று முடிவு செய்து அதனடிப்படையில் வேட்பாளர் தேர்வு பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த எம் ஆர் காந்தி ஆவார் இவருக்கு நாகர்கோவிலில் ஆதரவு அதிகம் உள்ளதால் திமுக தலைமை வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

துணை மேயர் மேரி பிரின்சி லதா :

இவர் திராவிட முன்னேற்றக் கழக பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் இவருடைய கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். துணை மேயர் மேரி பிரின்சிலதா திராவிட முன்னேற்றக் கழக
நகர தொண்டரணி துணை அமைப்பாளராகவும் தற்போது மாநகர துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

மேலும் கோட்டாறு மறை மாவட்ட குடும்ப நலப்பணிக்குழு வட்டார உறுப்பினர், கோட்டாறு மறைமாவட்ட அருட்பணிப் பேரவை உறுப்பினர், கிறிஸ்தவ வாழ்வு சமூகம் வட்டார உறுப்பினர்,
மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி பெண்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி, ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்குதல் போன்ற சமுதாய தொண்டாற்றி வருவதால் சமூகத்தில் நற்பெயர் இருந்து வருகிறது.

மேலும் அமைதியான முக சுபாவம் கொண்டவராக கழக உடன்பிறப்புகளை அரவணைத்து செல்வது மட்டுமல்லாமல், பொதுமக்கள் எந்நேரத்திலும் இவரை எளிதில் அணுக முடியும் என்ற நற்பெயருடன் வலம் வருபவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையான கமிஷன் கரப்ஷன் போன்ற எந்த ஒரு விஷயங்களிலும் சிக்காமல் தனது பணியை நேர்மையுடன் செய்து வருபவர். இவருக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. தற்போதைய மேயரின் நெருக்கடி மற்றும் எதிர்ப்பிற்கு மத்தியில் தைரியமாக போராடி தலைமை கழகத்திற்கு எந்த ஒரு அவப்பெயரும் ஏற்படுத்தாதபடி மக்கள் பணி செய்து வருபவர்.

பல இடங்களில் ஒரு பெண் என்று பாராமல் சொந்தக் கட்சியில் முக்கிய நபர்களால் நிராகரிக்கப்பட்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையை பின்பற்றுவதிலும் கழகம் தனக்குத் தந்த பொறுப்பை வெகு கச்சிதமாக செய்து முடிப்பதிலும் இவர் வல்லவர். ஆகவே இவருக்கு வாய்ப்பு வழங்கினால் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் வாக்குகளை பெறுவது எளிது எனவும், கோஷ்டி பூசலில் இருந்து திமுக தன்னை தற்காத்து கொள்ளலாம் எனவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக அறிவாலய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேயர் மகேஷ் :

இவர் நாகர்கோவில் தொகுதி மக்களிடையே நன்கு பரிச்சயமானவர் ஆவார் இவர் தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இனைத்துக் கொண்ட நாள் முதல் மிகவும் சுறுசுறுப்புடன் பணியாற்றி மாநகர செயலாளர், மாவட்டச் செயலாளர் என வளர்ச்சி கண்டவர் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நடைபெற்ற முதல் மேயர் தேர்தலில் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினர்களால் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான சுரேஷ் ராஜனின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர் மேயர் தேர்தலுக்குப் பின் அமைச்சர் மனோ தங்கராஜன் தீவிர ஆதரவாளராக மாறியதால் கட்சி தலைமையில் இவருக்கு நெருக்கம் அதிகம் ஏற்பட்டது. நாளடைவில் அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இவருக்கு மோதல் போக்கு ஏற்பட்டு மேயரின் ஆதரவாளர்களும், அமைச்சர் மனோ தங்கராஜ்ன் ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் அளவில் உள்கட்சி பூசல் நிலவி வருகிறது.

மேலும் கட்சித் தொண்டர்களை பொது இடங்களில் வைத்து மரியாதை குறைவாக நடத்தி, தாறுமாறாக திட்டுவதால் இவருடன் ஆரம்ப காலத்தில் இருந்த ஆதரவாளர்கள் இவரை விட்டு விலகிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் உதவி கேட்கும் கழக உடன்பிறப்புகளுக்கு இவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.

மேலும் நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெற்ற சாலை பணி, சாக்கடை ஓடைப்பணி, மழை நீர் வடிகால் ஓடைப்பணி, குளம் தூர்வாருதல், நடைபாதை அமைப்பது போன்ற பணிகளை தொடங்கி வைத்து புகைப்படம் எடுப்பதில் காட்டும் ஆர்வம் பணி நடைபெறும் போது பணியை ஆய்வு செய்வதில் இல்லை என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.

அதேபோல் அண்மையில் ஒரு தேசிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற கட்சியின் நிர்வாகியால் இவர் மீது நாகர்கோவில் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இதனால் தலைமைக்கு இவர் மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளதாக தொண்டர்களே தெரிவிக்கின்றனர்.

அதேபோல் தலைமை பாஜகவை விமர்சிக்கும் போதும், எதிர்த்து நிற்கும் போதும் குமரி மாவட்டத்தில் பாஜகவை எதிர்த்து நிற்க வேண்டிய கிழக்கு மாவட்ட திமுக முற்றிலுமாக பாஜகவினருக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகவும், பாஜகவின் மாமன்ற உறுப்பினர்களுடன் நெருக்கம் காட்டி தன்னுடைய மேயர் பதவியை தக்க வைத்துக் கொண்டு வருவதாகவும், மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களை அரவணைத்து செல்ல இவர் தவறியதாகவும், கோயில் விழாக்களுக்கு மட்டுமே இவர் முன்னுரிமை அளித்து மற்ற மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்ப்பதாகவும் இவர் மீது கழக கண்மணிகளே தலைமைக்கு புகார் அளித்துள்ளதால் தலைமை இவருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்க தயக்கம் காட்டி வருவதாகவும், பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஹெலன் டேவிட்சன் :

இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் கனிமொழி கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர். கனிமொழி தென் மாவட்டங்களுக்கு வரும்போது அவருடன் இவரை பார்க்க முடியும் என்பதாலும் தற்போது கனிமொழி தென் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக இருப்பதால் தனக்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் காண சீட்டு ஒதுக்கப்படும் என்று தனது ஆதரவாளர்களுக்கு இவர் தெரிவித்து வருகிறார்.

மேலும் இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் தற்போதும் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனின் தீவிர ஆதரவாளராகவே இருந்து வருகிறார். இவர் கட்சி நடத்தும் முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே கலந்து வருவதாகவும் தலைமை அறிவிக்கும் போராட்டங்களில் தலை காட்டுவதும் மட்டுமே இவரின் வேலை மாறாக சமூக பணி செய்வது பொதுமக்கள் சேவை செய்வது போன்ற செயல்களில் இவரைப் பார்க்க முடியாது எனவும் இவரின் ஆதரவாளர்களே இவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியாது என்ற நிலை உள்ளதாக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போது இவருக்காக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றினார்கள். ஆனால் தற்போது முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனும் நாகர்கோவில் தொகுதியை தனக்கு தர வேண்டும் என தலைமையை கேட்டு வருவதால் இவருக்காக சுரேஷ் ராஜன் தரப்பினர் வேலை செய்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது. ஆகவே சிபாரிசு அடிப்படையில் ஹெலன் டேவிட்சன் பெயர் தலைமைக்கு சென்றாலும் தலைமை இம்முறை 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவதில் உறுதியாக உள்ளது. எனவே இவருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காது என அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்து வருவதாக ஒரு தகவலும் உண்டு.

எது எப்படியோ நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தி நாகர்கோவில் தொகுதியை கைப்பற்ற தலைமை கழகம் ஏற்கனவே முடிவு செய்து வேட்பாளராக தற்போது நாகர்கோவில் மாநகராட்சியில் துணை மேயராக இருந்து வரும் மேரி பிரின்ஸி லதாவின் பெயரை டிக் செய்து ரகசியமாக வைத்துள்ளதாகவும், வேட்பாளர் அறிவிப்பின் போது இவர்தான் வேட்பாளர் என அறிவித்து உடன்பிறப்புகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளது எனவும் திமுகவின் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்று இலக்கில் குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி தமிழகத்தில் தொடரும் என மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நான்குவழிச் சாலை விதிமுறைகளை மீறி மணக்கரை பகுதியில் டோல்பிளாசா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
தக்கலையில் அதிமுகவில் இணைந்த தேமுதிகவினர்
குமரியில் வேறு வாலிபருடன் பெண்ணின் போட்டோவை இணைத்து சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளம்பெண் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
கொல்லங்கோடு அருகே பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: இன்ஜினியர் மீது போக்சோவில் வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

திமுகவினர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு

March 20, 2025
58 Views
2 நாள் சுற்றுப்பயணம் முதல் அமைச்சர்
திருவண்ணாமலையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி
பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
ராஜிவ்காந்தி33-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account