மார்த்தாண்டம், ஜன.20 –
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து எஸ் பி ஸ்டாலின் திடீர் என்று நேற்று மாலை ஆய்வு செய்தார். பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 7 கனரக வாகனங்கள், மற்றும் கார் , பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.
இதனைத் தொடர்ந்து எஸ்பி ஸ்டாலின் நேற்று மாலை திடீரென்று விபத்து பகுதியை ஆய்வு செய்தார். மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் தமிழரசன், டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
மேம்பாலத்தில் விபத்து நடைபெற்ற பகுதியை எஸ் பி பார்வையிட்டார். மேம்பாலத்தில் மத்தியில் ஸ்பிரிங் போஸ்ட் வைக்கவும், மேம்பாலம் பகுதி முழுவதும் மத்தியில் இரண்டு மஞ்சள் கலர் கோடு போடவும், 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும், முந்தி செல்லாதீர்கள் போர்ட் வைக்கவும் உத்தரவிட்டார்.
இரண்டு மஞ்சள் கலர் கோடு வைத்தால் சாலை விதிகளின்படி முந்தி செல்லக்கூடாது. முந்தி சென்றால் அதிரடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.



