நாகர்கோவில், ஜன. 15 –
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தவெக கிழக்கு மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி காமராஜபுரம் 15வது வார்டு தவெக செயலாளர் ஜெரின் ஜாக்சன் ஏற்பாட்டில் சுமார் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக குமரி கிழக்கு மாவட்ட செயளாலர் மாதவன் கலந்து கொண்டார். இணைச் செயலாளர் பிரேம் குமார், நாகர்கோவில் மாநகர கழக செயலாளர் சிவன் விஜய், தவெக நிர்வாகி ரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து இனிப்புகளை பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழாவை தொடர்ந்து அங்கு வந்திருந்த ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை குமரி கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் பிரேம்குமார் வழங்கினார்.
இந்த விழாவில் வார்டு இணைச்செயலாளர் சிவா, பொருளாளர் ஜினோ மோன், இணைப் பொருளாளர் ராஜா, உறுப்பினர்கள் மகேஷ் மற்றும் ஹரிஹரன் உட்பட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



