திருப்பூர், ஜன. 14 –
திருப்பூர் பல்லடம் ரோடு கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குணா. இவரது மனைவி மஞ்சு. இவர்களது மகள் விதுஷா (6). ஜெய் சாரதா பள்ளியில் 1 ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலேயே ஆங்கிலத்தில் ஆர்வம் கொண்ட சிறுமி அதில் தனித்துவமாக செயல்பட்டு வந்தார். ஆங்கில மொழியை வேகமாகவும் கற்று வந்தார். இந்த நிலையில் 40 ஆங்கில சொற்களை 45 வினாடிகளில் வேகமாக வாசித்து உலக சாதனை படைத்தார். இது
கிட்ஸ் புத்தகம் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. உடனே இது அங்கீகரிக்கப்பட்டு மாணவிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், கிட்ஸ் புத்தகம் ஆப் ரெக்கார்ட்சில் மாணவியின் சாதனையும் இடம்பெற்றது.
மேலும் அவர்கள் அனுப்பிய வாழ்த்து சான்றிதழில் கூறியிருப்பதாவது: அன்பார்ந்த சாதனையாளர், உங்கள் அபூர்வமான சாதனை உலகில் ஒரு புதிய முத்திரையை பதித்துள்ளது.
கிட்ஸ் புத்தகம் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-இல் இடம் பெற்றதன் மூலம், உங்கள் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பு சாதனையாக மாறியுள்ளது என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். இந்த மதிப்புமிக்க தளம், தனித்துவமான திறமைகள், ஊக்கமளிக்கும் குழந்தைகள் மற்றும் மகத்தான சாதனைகளை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் சாதனை, சிறப்பிற்கான உங்கள் திறன் மற்றும் உயர்ந்த கனவுகளுக்கான உங்கள் தைரியத்தை வெளிப்படுத்துகிறது.
இந்தச் சான்றிதழ், சிறப்பு பரிசு மற்றும் கிட்ஸ் ஹால் ஆப் பேம் உறுப்பினர் தகுதி உங்கள் அதிசயமான பயணத்தின் அடையாளங்களாகும். உங்கள் சாதனை கே பி ஆர் இணையதளத்தில் ஒளிர்கிறது. நீங்கள் ஒளிரும் நட்சத்திரம் என்பதற்கும், உங்கள் சிறப்புத் திறன் அளவில்லாதது என்பதற்கும் சான்றாகும். எண்ணற்ற இளம் மனங்களை தொடர்ந்து ஊக்குவிக்கவும், மேலும் உயரங்களை எட்டிக்கொண்டே செல்லவும், எதிர்கால சாதனைகளுக்கான பாதையை ஒளிரச் செய்யவும் உலகம் உங்களை கொண்டாடுகிறது! அன்புடன், கிட்ஸ் புத்தகம் ஆஃப் ரெக்கார்ட்ஸ் குழு என குறிப்பிடப்பட்டுள்ளது. சாதனை படைத்த மாணவியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.



