மார்த்தாண்டம், ஜன. 13 –
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சப்பாத் கடவு பகுதியில் ஆகாயத்தாமரை தேங்கியது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையால் அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
தாமிரபரணிஆறு திக்குறிச்சி, ஞாறாம்விளை, குழித்துறை வழியாக தேங்காய் பட்டணம் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் ஏராளமான குடிநீர் கிணறுகள் உள்ளது தினசரி ஏராளமான பொதுமக்கள் குளிப்பது உண்டு.
குழித்துறை சப்பாத் பகுதியில் படித்துறை அருகே தண்ணீர் பாய்ந்து செல்ல கீழ் பகுதியில் மடை உள்ளது. தற்போது மழை இல்லாததால் தற்பொழுது தண்ணீர் இந்த மடை வழியாக பாய்ந்து செல்கிறது. சமீபத்தில் இந்த மடை பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பிகள் தேங்கி தண்ணீர் பாய்ந்தது. ஆனால் ஆகாயத்தாமரைச்செடிகள் தேங்கி இந்த பகுதியில் பொதுமக்கள் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .மேலும் தண்ணீர் துர்நாற்றம் வீசியது. இதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தத் தகவல் குழித்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர் .
இன்று இரண்டு ஊழியர்கள் வருகை தந்து மடைப்பகுதியை மேலும் திறந்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி ஆகாயத்தாமரைகளை அகற்றினர். இதனால் இந்தப் பகுதி சுத்தமாக மாறியது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.



