சுசீந்திரம், ஜன. 12 –
சுசீந்திரம் அருகே உள்ள தேரூரில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் தடைப்பட்டு வருகிறது இரவு நேரத்தில் மின்சாரம் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வருவதும் பின்பு கட்டாவது என தொடர்கிறது. இதனால் நள்ளிரவு வேளைகளில் பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பவரும் வயதான முதியவர்களும் மிகுந்த மனவேதனை அடைகின்றனர்.
அதுபோல பகல் வேளைகளிலும் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டு தடைப்பட்டு வருகின்றது. ஒரு வார காலமாக தொடர்ந்து இதுபோல நடைபெற்று வருவதை இன்னும் சரி செய்யவில்லை. எனவே இது போல மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை சரி செய்ய வேண்டும் என தேருர் சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்


