By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: முட்டம் பகுதியில் விழுதுகள் – ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம்: கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முட்டம் பகுதியில் விழுதுகள் – ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம்: கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முட்டம் பகுதியில் விழுதுகள் – ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம்: கலெக்டர் ஆய்வு

Last updated: January 10, 2026 7:41 pm
January 10, 2026
31 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 10 –

கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முட்டம் பகுதியில் புனரமைக்கப்பட்ட விழுதுகள் – ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் நலனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்துடன் இணைந்து விழுதுகள் என்ற திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது. விழுதுகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான ஒருங்கிணைந்த சுகாதார மறுவாழ்வு சேவைகளை அவர்களின் இல்லங்களிலும், பிரத்யேக மையங்களிலும் வழங்குவதாகும். மேலும் இது அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கவும், கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் கோட்ட மற்றும் வட்டார வாரியாக அரசு கட்டிடங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் தசைப்பயிற்சியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மனநல ஆலோசகர்கள் மற்றும் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் மூலமாக அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான பிசியோதெரபி, கண் பார்வை அளவியல், பேச்சுப் பயிற்சி, உளவியல் உள்ளிட்ட சேவைகளை ஒரே இடத்தில் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அதனடிப்படையில் குருந்தன்கோடு வட்டாரம் முட்டம் பகுதியில் ரூ.14.5 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட விழுதுகள் – ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்ட அளவில் 02 ஒரிடச் சேவை மையங்கள் மற்றும் வட்டார அளவில் 17 ஓரிட சேவை மையங்கள் நிறுவிட அரசு கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்டு பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட ஓரிட சேவை மையங்கள் பிப்ரவரி 2026 முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது என கூறினார்.

நடைபெற்ற ஆய்வில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்கும் புதிய இயந்திரம்
யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை பற்றி பேசினால் தான் அவர்களுக்கு அடையாளம் – கனிமொழி
அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் திருவள்ளுவருக்கு புகழஞ்சலி
வருகின்ற தேர்தலில் 200 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் – செல்வ பெருந்தகை
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

நடுநிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்.

February 10, 2025
63 Views
உங்களை தேடி உங்கள் ஊரில்திட்ட முகாம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நவராத்திரி
ஊட்டி கக்குச்சி ஊராட்சியில் நடந்த மக்கள் சந்திப்பு
செந்துறை அருகே அம்மன் கோவில் தேர் திருவிழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account