களியக்காவிளை, ஜன. 8 –
களியக்காவிளை அருகே அதங்கோட்டில் மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தமிழக – கேரளா எல்லை பகுதியான செங்கவிளை, குளப்புறம், அதங்கோடு மடிச்சல், படத்தாலுமூடு வழியாக கனிம வளம் ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர்த்து எப்போதும் காலி டாரஸ் லாரிகள் வந்த வண்ணம் உள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளது.
ஆகவே இதனை தடுக்க அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட எஸ்.பி ஸ்டாலினுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். ஆகவே மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் அதங்கோடு பை – பாஸ் ரோட்டை ஆய்வு செய்தார். அத்துடன் காலி டாரஸ் லாரிகள் வராமல் தடுக்கும் பொருட்டு இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தியுள்ளார். ஆகவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டும் டாரஸ் லாரிகள் அனுமதிக்கப்படுகிறது.



