கோவை, ஜன. 07 –
காரமடை, டாக்டர். ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் கோவை, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் வருகின்ற ஜனவரி 12 சுவாமி விவேகானந்தரின் 163 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் தினவிழா டாக்டர். ஆர்.வி. கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்க நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர்.சி.என் ரூபா அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பெரியநாயக்கன்பாளையம், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் மூத்த துறவி சுவாமி தத்பாஷானந்தர் ஆசியுரை வழங்கினார். சுவாமி ஹரிநாதானந்தர் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், “நம் ஒவ்வொருவருக்குள்ளும் அளப்பரிய ஆற்றல் உள்ளது. அதனை உணர்ந்தால் வலிமை உடையவர்கள் ஆகலாம். நம் தேசம் புனிதமான தேசம் நம் தாய்க்கு நிகராக நம் தேசத்தை போற்ற வேண்டும். எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. சுயநலமற்ற சேவையால் கடவுள் சக்தியை உணரலாம்” என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நிகழ்வின் நிறைவாக, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்லூரியின் செயலர் முனைவர். கந்தப்பன் அவர்கள் நன்றியுரை கூறினார். இதனைத் தொடர்ந்து தேசிய இளைஞர் தின விழா பேரணி நடைபெற்றது. இப்பேரணியை காரமடை, காவல் உதவி ஆய்வாளர் திரு.செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டாக்டர். ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரி, யுனைடெட் கல்வி நிறுவனங்கள், கங்கா நர்சிங் கல்லூரி, ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரி, கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இருந்து 800 மாணவ, கலந்து கொண்டனர். மாணவிகள் இந்நிகழ்வில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கல்லூரியில் இருந்து சுவாமி சூர்யாத்மானந்தர், முதல்வர் முத்துசாமி, இயக்குநர் ஸ்ரீதர், காரமடை ரோட்டரி கிளப் தலைவர் குமணன், காரமடை, செளமியா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சதீஷ், ஆர்.வி. கல்லூரியின் நிர்வாக மேலாளர் மனோகரன் மற்றும் பேராசிரியர்கள்
கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வு இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.



