நாகர்கோவில், ஜன. 05 –
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அனைத்து அரசு ஊழியர்கள் நலச்சங்கம் நடத்தும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நாகர்கோவிலில் வைத்து தலைவர்
மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் தங்க கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, வசந்தகுமார், மக்கள் தொடர்பு அலுவலர், குமரி வீல் செயர் அறக்கட்டளை நாகர்கோவில் சிவசங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர், பேரூராட்சிகள், நாகர்கோவில் மணடலம், அருள், மாற்றுத்திறனாளிகளின் நியமன உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் குமரி வீல் செயர் அறக்கட்டளை சார்பாக 15 பேருக்கு ரூ.22000/- மதிப்புள்ள கிரட்சஸ் மற்றும் ரூ.15000/- மதிப்புள்ள புதிய ஆடைகள் வழங்கப்பட்டது இதனை குமரி வீல் செயர் அறக்கட்டளை இயக்குநர் பிரின்ஸ் வ.சு. அபிஷேக் சார்பாக வழங்கப்பட்டது. 1 நபருக்கு ரூ.8000/-ம் மதிப்புள்ள வீல் செயர், 1 நபருக்கு ரூ.8000/- ம் மதிப்புள்ள தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பொருளாளர் துர்காதேவி, கொளரக ஆலோசகர் தேவதாஸ், மகளிர் அணி தலைவி ஜானகி, மாவட்ட துணை தலைவர் விவேக பெருமாள், பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், ராஜா. ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



