குளச்சல், ஜன. 2 –
மணவாளக்குறிச்சி அருகே காந்தாரி விளையை சேர்ந்தவர் சுரேஷ் (46). பெயின்ட்ரான இவர் மணிக்காட்டு விளை பகுதியில் பெயின்டிங் வேலை செய்துவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது கூட்டுமங்கலம் பெட்ரோல் பங்கு பகுதியில் வரும்போது எதிரே நெல்லை மாவட்டம் கூடங்குளம் சேர்ந்த ஆல்பர்ட்ராஜ் ஜெகன் (44) என்பவரது மகனான 17 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக் சுரேஷ் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷுக்கு தலையில் படுகாயம் அடைந்து, உடனே குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் சிறுவனின் தந்தை ஆல்பர்ட்ராஜ் ஜெகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


