கிருஷ்ணகிரி, டிச. 20 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாப்பனூர் கூட்ரோடு பகுதியில் கிருஷ்ணகிரியில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி சென்ற காரும், கும்பகோணத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
பெங்களூர் தாவர கரையைச் சேர்ந்த சேர்ந்த நிக்கில் குமார் (26), கீதா (40), ரேகா சிங்க் (42), லட்சுமி (69) ஆகிய நான்கு பேரும் காரில் மேல்மருவத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பெங்களூர் கஸ்பா பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (50), உஜ்பல் (35), ஹர்ஷிதா (33), விஜயலட்சுமி (40) ஆகிய நான்கு பேரும் சுற்றுலா சென்று விட்டு கும்பகோணத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது இன்று காலை 10:50 மணிக்கு கிருஷ்ணகிரி மெயின் ரோடு பாப்பனூர் பகுதியில் இரண்டு காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இதில் எட்டு பேரும் படுகாயம் அடைந்தனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு. மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை தாசில்தார் ராஜலட்சுமி பாதிக்கப்பட்டவரிடம் விபத்து குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



