இராமேஸ்வரம், டிச. 08 –
ராமேஸ்வரத்தில் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற
நீதிமன்ற தீர்ப்பை மீறி முருக பக்தர்களை அவமதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியின் சார்பாக ராமேஸ்வரம் தேவர் சிலை அருகில் இந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கே. இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற தடை செய்த திமுக அரசை கண்டித்தும், இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக நடந்து கொள்ளும் திமுகவை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த சூழ்நிலையில் தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 100 மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறை கைது செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமேஸ்வரம் நகரத் தலைவர் நம்புராஜன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திருவருட்செல்வன் காலிஸ், வீர சௌந்தரராஜன் மாவட்ட பொறுப்பாளர்கள் மேகநாதன், கார்த்திக், நாராயணன், குமார் இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவர் வசந்தி பாஜக நகர் தலைவர் மாரி மாவட்ட செயலாளர் மீரா பாஸ்கரன் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் துணைத் தலைவர் சரவணன் உள்ளிட்ட 100 மேற்பட்டோரை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.



