By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வருவாய் துறை ஊழியர் கூட்டமைப்பு ஸ்டிரைக்; குமரியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வருவாய் துறை ஊழியர் கூட்டமைப்பு ஸ்டிரைக்; குமரியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் பாதிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வருவாய் துறை ஊழியர் கூட்டமைப்பு ஸ்டிரைக்; குமரியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் பாதிப்பு

Last updated: November 18, 2025 5:06 pm
November 18, 2025
45 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 18 –

குமரி மாவட்டத்தில் வருவாய் துறை ஊழியர்களின் கூட்டமைப்பு ஸ்ட்ரைக் காரணமாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்களின் கூட்டமைப்பு தங்களின் நீண்ட கால கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (18ம் தேதி) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் ஒரு பகுதியாக தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வருவாய் துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அரசு அலுவலகங்களில் அன்றாட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

அதிகரித்து வரும் பணிச்சுமைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்குதல், பணியாளர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்தல், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளுக்கு தேவையான போதிய நிதி ஒதுக்கீடு மற்றும் பயிற்சி வழங்குதல், இணையதள சர்வர் பழுதுகளை சரி செய்து தடையற்ற சேவைகளை உறுதி செய்தல், பணிச்சுமை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அடிப்படை வசதிகளும் போதுமான பணியாளர்களும் இன்றி பணி செய்ய வேண்டி உள்ளது. எங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதால் வேறு வழி இன்றி இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், திருவட்டார், விளங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 தாலுகா அலுவலகங்கள், நாகர்கோவில், பத்மநாபபுரம் ஆகிய 2 ஆர்டிஓ அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வருவாய் பிரிவு உள்ளிட்டவற்றில் பணியாளர்கள் வருகை இன்றி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகப் பணிகள் ஒட்டுமொத்தமாக முடங்கியது. இதனால் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளும் பதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

செங்கல் சிவபார்வதி கோயில் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட் புக்குகள் வழங்கப்பட்டது.
பயணிகள் நிழற்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டிய பிரின்ஸ் எம்எல்ஏ
புத்தளம் அருகே முத்தாரம்மன் கோவிலில் சாமி கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் செயின் திருட்டு
தென்தாமரைகுளத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கால வாலிபால் பயிற்சி
24/7 மக்கள் பணி செய்து வருபவர்கள் மீது அவதூறு பரப்பும் சமூக வலைதளங்கள் : எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

கேடிஎம் 390 டியூக் மற்றும் அட்வென்சர் மாடல்களில் 350சிசி என்ஜினுடன் அறிமுகம்

April 29, 2026
23 Views
களியக்காவிளை போலீசாரின் வாகன சோதனை
உழவர் நலத்துறை சார்பாக, உழவரைத் தேடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியில் தீபம் ஏற்றும் விழா
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account