புதுக்கடை, நவ. 4 –
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரைட்சன் (48). இவர் குமரி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் இனயம் பகுதி தேரிவிளையில் உள்ள தனது நண்பர் மெர்லின் என்பவரை பார்ப்பதற்காக அடிக்கடி அங்கு செல்வது வழக்கம். அப்படி அங்கு செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் பிரைட்சனை கெட்ட வார்த்தைகள் பேசி தகராறு செய்து அடிக்க செல்வது வழக்கமாம்.
இந்த நிலையில் கடந்த கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி அன்று தடம் எண் 302 என்ற நீரோடி செல்கின்ற அரசு பஸ்சை பிரைட்சன் ஓட்டி செல்லும்போது, விஜயன் கல் எடுத்து எறிந்து பஸ் சேதமடைந்த சம்பவம் நடைபெற்றது. அப்போது சம்பவம் தொடர்பாக பிரைட்சன் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விஜயனை பிடித்து, எச்சரித்து அனுப்பி வைத்தார்கள்.
இந்த முன் விரோதத்தில் கடந்த 27 ஆம் தேதி மதியம் தேரிவிளை பகுதியில் பிரைட்சன் செல்லும் போது, விஜயன் திடீரென வழிமறித்து கெட்ட வார்த்தைகள் பேசி கையில் வைத்திருந்த கம்பால் பிரைட்சனை அடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் கொண்டு அனுமதித்தார்கள். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் விஜயன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


