நாகர்கோவில், அக். 22 –
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 18ஆம் தேதி அன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரஸ் கிளப் செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார், தலைவர் மதன் முன்னிலை வகித்தார், நாகர்கோவில் பிரஸ் கிளப் கன்னியாகுமரி கிளை செயலாளர் இக்பால் நன்றி கூறினார். மூத்த பத்திரிகையாளர் தாகூர் வரவேற்று பேசினார், நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலெக்டர் அழகுமீனா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்: நான் முதல் முதலாக கலெக்டராக பொறுப்பேற்றது கன்னியாகுமரி மாவட்டத்தில் தான். என்னுடைய ஒன்றரை ஆண்டு பகுப்பாய்வின் மிக அழகான மாவட்டம், திறமை வாய்ந்த மக்கள், வளர்வதற்கான நல்ல ஆற்றல் ஏற்ற சூழ்நிலை கொண்டுள்ளது. மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் வளர வேண்டும். வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் மிக மிக முக்கியமானது. எவ்வளவு திறமைகள் இருந்தாலும் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் வெளியூர்களில் போய் வேலை பார்க்கும் சூழ்நிலை காணப்படுகிறது. தொழிற்சாலைகளை அரசின் உதவியோடு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம்; கன்னியாகுமரி மாவட்டம் இன்னும் 10 மடங்கு பொருளாதாரத்தில் வளர வேண்டும். மக்களுடைய தரம் உயர்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. மாவட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. கன்னியாகுமரியில் பணி செய்யும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அனைவருக்கும் இந்த வருட தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு 150க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து மறைந்த பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு தீபாவளி பரிசு பொருட்களை கலெக்டர் அழகுமீனா வழங்கினார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி சுஷ்மா, நாகர்கோவில் பிரஸ் கிளப் பொருளாளர் வேலாயுதன் பிள்ளை உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட உறுப்பினருக்கு ரூபாய் 25 ஆயிரம் நிதியுதவியை மேயர் மகேஷ் வழங்கினார். பின்னர் அனைத்து உறுப்பினர்களுக்கும் தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாக குழு உறுப்பினர்கள் ஐயப்பன், மணிகண்டன், டென்னிசன், கணேஷ், மற்றும் உறுப்பினர்கள் சிந்து, உமாசங்கர், கோகுல், சுரேஷ்குமார், ஜாண் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.



