மார்த்தாண்டம், அக். 13 –
மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு மது போதையில் பைக்கில் மூன்று இளைஞர்கள் முதலில் வந்து 3 பீர் வாங்கி விட்டு மீண்டும் 3 பீர் வாங்கி உள்ளனர். தொடர்ந்து அங்கு நின்று டாஸ்மாக் விற்பனையாளர்களை தகாத வார்த்தைகளை பேசி திட்டி உள்ளனர். அப்போது எதற்காக தகாத வார்த்தைகளை பேசிகிறீர்கள் என்று விற்பனையாளர்கள் கேட்டு உள்ளனர். அப்போது மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் கையில் இருந்த பீர் பாட்டிலை டாஸ்மாக் கடை மீது வீசி உள்ளார்.
இதில் உண்ணாமலைகடையை சேர்ந்த சுந்தர் ராஜ் (58) விற்பனையாளர் காயமடைந்தார். மேலும் மது வாங்க வந்த மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. காயமடைந்த விற்பனையாளர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



