பூதப்பாண்டி, அக்டோபர் 10 –
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் கோலப்பன். இவரது மகன் மணிமுத்து பெருமாள் (43). இவர் பூதப்பாண்டியை அடுத்துள்ள திட்டு விளை பகுதியில் தான் கடந்த இருபது ஆண்டுகளாக பலசரக்கு கடை ( மளிகை கடை) நடத்தி வருகிறார். கடந்த 7-ம் தேதி மணிமுத்து பெருமாள் தனது மனைவி மாரியம்மாளுக்கு போன் செய்து தன்னுடைய நண்பர் உடல்நிலை சரியில்லாமல் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தான் அங்கு சென்று பார்த்து விட்டு மறுநாள் வருகிறேன் என்னை தேட வேண்டாம் என்று கூறி சென்றதாகவும் தற்சமயம் அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ஸ் ஆப் ஆகியுள்ளது. இது குறித்து பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லாததால் அவரது தந்தை கோலப்பன் (71). இது குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


