திண்டுக்கல், செப். 30 –
திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டியில் உள்ள பாலா படிப்பகத்தில் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படிப்பக மாணவர்கள் குல முதல்வர் வாழ்த்து பாடலை பாடினார்கள். பாலா படிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் பொறியாளர் லயன்.நல் நாகராஜன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். முதன்மை ஆலோசகர் பேராசிரியர் முனைவர் இரா. மனோகரன் படிப்பகத் தோற்றம், நோக்கம் மற்றும் திட்டங்களை குறித்து விளக்கி பேசினார். பாலா படிப்பதத்தின் இயக்குநர் (செயல்பாடுகள்) ஆசிரியர் எஸ். சவரி மணி கலந்து கொண்டு இரண்டாம் ஆண்டின் செயல்பாடுகள் குறித்து பேசினார். இதில் மு. தமிழ்செல்வன் பயனாளர் உரை 1 குறித்து பேசினார். டிஎன்பிஎஸ்சி மாணவர் ஸ்டீபன் பயனாளர் உரை 2 குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியின் போது வினிகாஸ்ரீ தனி நடிப்பு நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பாலா படிப்பகத்தின் உள்ள மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக நிறுவனர் மற்றும் இயக்குனர் (வேளாண்மை) முனைவர் பா. மூர்த்தி, சென்னை சிவாராம் குழுமம் ஹவி. சிவானந்தம், மதுரை மேலூர் காவல்துறை துணைத் தலைவர் (பணி நிறைவு) ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பாலா படிப்பக மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பாலா படிப்பக நிர்வாக தலைவர் வாசுதேவன், பாலா படிப்பக ஆலோசகர்கள், இயக்குநர்கள், தன்னார்வலர்கள், பயனாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியின் முடிவில் பாலா படிப்பக இயக்குனர் (நிதி நிர்வாகம்) அ. கண்ணன் நன்றி கூறினார்.



