நாகர்கோவில் ஜூன் 4
கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் நாகா்கோவில் கோணம் பொறியியல் கல்லூரியில் இன்று எண்ணப் படுவதை ஒட்டி வாக்கு என்னும் மையம் உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று ( ஜூன் 4 ஆம் தேதி) காலை முதல் நாகா்கோவிலில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் புன்னைநகா் பகுதியிலிருந்து மாற்று பாதையில் திருப்பிவிடப்படும். கோணத்தில் இருந்து வரும் வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டா் தொலைவு வரை மக்களுக்கு அனுமதியில்லை. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் மாவட்ட காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் அடையாள அட்டையுடன் வரும் முகவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.