திண்டுக்கல், செப். 25 –
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள கிரியம்பட்டியில் உள்ள ஸ்ரீவீ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஸ்ரீவீ கல்லூரியின் தலைவர் எஸ்.எஸ். சுதந்திரம் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி இக்கல்லூரியின் செயலாளர் கே. பிரபாகரன் தலைமையில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஸ்ரீவீ கல்லூரியின் முதல்வர் ஆர். அசோகராஜன் முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கு சென்னை பாலக் மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனரும் ஸ்ரீவீ கல்லூரியின் நிர்வாக இயக்குனருமான டாக்டர். ரஞ்சிதா சுதந்திரம் வாழ்த்துரை ஆற்றினார்.
கல்லூரியின் ஆளுமை திறன் இயக்குனர் சாந்தி, தொழில் வழிகாட்டி இயக்குனர் பிரியா, மதுரை இணை பேராசிரியர் டாக்டர் ஜெ. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், செஞ்சிலுவை சங்க சேர்மன் டாக்டர் என்.எம்.பி. காஜாமைதீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி 200 க்கும் மேற்பட்ட ஸ்ரீவீ கல்லூரியின் மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.



