கிருஷ்ணகிரி, செப். 25 –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



